மாஸ்கோ,
ரஷ்யாவுக்கான அரசு முறைப்பயணத்தின் ஒரு பகுதியாக, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நேற்று மாஸ்கோவில் அமைந்த தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையமான டோச்கா கிபெனியாவிற்கு விஜயம் செய்தார்.
அவரை வரவேற்பதற்காக, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் ஆலோசகர் டிமிட்ரி பெஸ்கோவ் மற்றும் ஸ்கோல்கோவோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஸ்கோல்டெக்) மூத்த துணைத் தலைவர் அலெக்ஸி பொனோமரேவ் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
இப்பயணத்தில், மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் பேரரசருடன் இணைந்து பங்கேற்றார்.
மொத்தம் ஒரு மணி நேரம் நீடித்த இந்த விஜயத்தின் போது, ரஷ்யாவின் முன்னணி ட்ரோன் தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட கண்காட்சியை சுல்தான் இப்ராஹிம் பார்வையிட்டார்.
தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து பெஸ்கோவ் பேரரசருக்கு விரிவாக விளக்கியார். பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
ஆளில்லா விமானங்கள் (UAV) துறையில் ரஷ்யாவின் வளர்ந்துவரும் திறனை பிரதிபலிக்கும் வகையில், இந்த கண்காட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.