Offline
Menu
ஆந்திர மதுபான ஊழல்: நடிகை தமன்னாவை விசாரிக்க கோரிக்கை
By Administrator
Published on 08/09/2025 09:00
News

அமராவதி, 

ஆந்திராவில் நடைபெற்றதாகக் கூறப்படும் மதுபான ஊழல் விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. நடிகை தமன்னாவை இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

2019 முதல் 2024 வரையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மதுபான விற்பனை தொடர்பான ஊழலில் சுமார் 3,500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர், நடிகை ரம்பாவின் சகோதரரான வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ். இதன் காரணமாக 11 பேர், அதில் முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஒய்எஸ்ஆர் தலைவர்களும் உட்பட கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், நடிகை தமன்னா நடத்தும் ‘வொயிட் அண்ட் கோல்டு’ என்ற நிறுவனத்தின் மூலம் சுமார் 300 கிலோ தங்கம் மோசடிப் பணத்தில் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டியின் உதவியாளர் வெங்கடேஷ் நாயுடுவுடன், தனியார் விமானத்தில் பயணம் செய்த தமன்னாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், தமன்னாவின் தொடர்பு மற்றும் பங்களிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் அனம் வெங்கடரமண ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

Comments