Offline
இன்று நாடாளுமன்றத்தின் மூன்றாவது வார அமர்வில் RMK13 குறித்த விவாதம்
By Administrator
Published on 08/09/2025 09:00
News

கோலாலம்பூர்:

13வது மலேசியா திட்டம் (RMK13) தொடர்பான விவாதம் தான் இன்று நாடாளுமன்றன் அமர்வின் மூன்றாவது வாரத்தில் நடைபெறுகிறது. அரசு மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் வளர்ச்சி, கொள்கை மற்றும் நிர்வாக அம்சங்களை தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

RMK13 ,மூன்று முக்கிய துறைகள், பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலன் மற்றும் நல்லாட்சியின் மேல் கவனம் செலுத்துகிறது.

இதுவரை 78 எம்பிக்கள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஊழல், KLIA உள்நாட்டு அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள், RON95 மானியம், மலேசியா–இந்தோனேஷியா கடல் எல்லை பிரச்சனை, தொழிலாளர் பயன்பாடு, MLFF திட்டம் உள்ளிட்ட விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஜூலை 31 அன்று RMK13 திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது 2026 முதல் 2030 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது, மொத்த முதலீடு RM611 பில்லியனாகும்.

அமெரிக்காவுடன் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை, தொழில்நுட்பக் கொள்கைகள், மற்றும் புதிய வரி விகிதங்களை தொடர்பாகவும் முக்கிய விளக்கங்களை அமைச்சர் தெங்க்கு ஜாஃப்ருல் வழங்கினார்.

இந்த அமர்வு ஆகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது.

Comments