கோலாலம்பூர்,
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று புக்கிட் துங்கு அரண்மனையில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ’ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலுடன் சந்திப்பு நடத்தினார்.
அரச மலேசிய போலீஸ் படை (PDRM) எதிர்நோக்கும் தற்போதைய சவால்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்குவதே இச்சந்திப்பின் நோக்கம் என்று மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், சிறப்புப் பிரிவு இயக்குநர் டத்தோ இப்ராஹிம் டாருஸ் மற்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முக்கிய பொறுப்புகளை ஏற்ற பிறகு, டத்தோ இப்ராஹிம் டாருஸ் மற்றும் டத்தோ எம். குமார் மாமன்னருடன் கொண்ட முதல் சந்திப்பாக இது அமைந்தது.