Offline
Menu
சிறந்த அனுபவம் பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பிரதமர் மோடி வாழ்த்து
By Administrator
Published on 08/19/2025 09:00
News

புதுடெல்லி,துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளாரக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

எங்கள் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளாராக சி.பி.ராதாகிருஷ்ணனை பரிந்துரைக்க தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆளுநராகவும் சி.பி ராதாகிருஷ்ணன் சிறந்த அனுபவம் பெற்றவர். அவர் வகித்த பல்வேறு தகுதிகளின் போது சமூக சேவை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பிறகு நட்டா கூறியதாவது: எதிர்க்கட்சிகளுடனும் பேசுவோம். துணை ஜனாதிபதிக்கு நடக்கும் தேர்தலில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம். அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். கட்சி மூத்த தலைவர்களும் தொடர்பில் இருக்கின்றனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர் என்றார்.

Comments