Offline
Menu
APMM: 7 மாதங்களில் 851 குற்றவாளிகள் கைது – 8.4 கோடி மதிப்புள்ள கடத்தல்கள் தடுக்கப்பட்டன
By Administrator
Published on 08/19/2025 09:00
News

புத்ராஜெயா,

மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (APMM) இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், பல்வேறு குற்றச்சம்பவங்களில் 851 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கைபற்றப்பட்ட கடத்தல் பொருள்களின் மொத்த மதிப்பு 8.4 கோடி ரிங்கிட் ஆகும் என்று APMM தெரிவித்துள்ளது. இதில், வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி, மனித கடத்தல், சிகரெட், மதுபானம், மானிய விலை பொருட்கள் மோசடி மற்றும் கப்பல் போக்குவரத்து குற்றங்கள் அடங்கும்.

கடத்தல் கும்பல்கள் தற்போது புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், கடத்தலுக்கு முன் ட்ரோன் கண்காணிப்பு நடத்தப்படுவதாகவும், கும்பல்களின் புதிய முறைகள் இது போன்ற நடவடிக்கைகளை சவாலாக மாற்றுவதாகவும், APMM கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் லக்ஸ்மணா மூடா முகமது ஜவாவி அப்துல்லா கூறினார்.

கடந்த காலத்தில் வடமலேசியாவில் சிகரெட், ஆடைகள் மற்றும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் கடத்தப்பட்டுள்ளதாகவும், சில கடத்தல்களில் கும்பல்களால் பறக்கவிடப்பட்ட ட்ரோன்களும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், எல்லையில் ட்ரோன் கண்காணிப்பு மற்றும் காவல்துறை-இராணுவ ஒத்துழைப்பு மூலம் அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோத பொருட்கள் நுழைவதை APMM தடுக்க முடிந்ததாக அவர் அறிவித்தார். மேலும், சில செயலிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் களத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சவாலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று இங்கு ஜீவா மெர்டேக்கா மரிட்டிம் மலேசியா திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments