Offline
உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்ய, மஞ்சிமா மோகன் பகிர்ந்த விஷயம்... உடலில் இந்த பிரச்சனையா?
By Administrator
Published on 08/27/2025 09:00
Entertainment

குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தொடர்ந்து சத்ரியன், FIR, தேவராட்டம் என தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் மஞ்சிமா மோகன் உடல்எடை பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், நானும் முடிந்தவரை எல்லா முயற்சிகளும் எடுத்துவிட்டேன், ஒருகட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என எண்ணினேன். ஹார்மோன் தொடர்புடைய பிரச்சனை உள்ளது, அதனால் உடல் பருமனாக உள்ளேன்.உடல் எடை பிரச்சனையை விட அந்த பிரச்சனையை சமாளிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.

Comments