நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர்.
அவர் தற்போது தனது காதலர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்ய இருக்கும் ரஜித் இப்ரான் பிரபல தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோடிக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர்.