கோலாலம்பூர்:
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இந்தத் தகவலை, தனது பிறந்தநாளான இன்று, அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். “சாய் தன்ஷிகாவுடன் நடந்த எனது நிச்சயதார்த்தத்தின் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் உங்கள் அன்பையும், ஆசீர்வாதங்களையும் நாடுகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், விரைவில் திருமணத் திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.