கோலாலம்பூர்:
68-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி, பிளஸ் மலேசியா பெர்ஹாட் (Plus Malaysia Berhad) நெடுஞ்சாலைகளில், வாகனப் போக்குவரத்து, ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வாகனங்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள், பயணத்தைத் திட்டமிட, மேம்படுத்தப்பட்ட MyPlus-TTA செயலியைப் பயன்படுத்துமாறு பிளஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் செயலி, வாகன ஓட்டுநர்களுக்கு, இலகுவான வழிகளைச் பரிந்துரை செய்து பயணத்தைத் திட்டமிட உதவுகிறது.
அதுமட்டுமின்றி நிகழ்நேரப் போக்குவரத்து தொடர்பான அறிவிப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல்,விரைவான தேடல் அம்சத்தையும் கொண்டுள்ளது.
பிளஸ் நிறுவனம், தினசரிப் போக்குவரத்தைக் கண்காணித்து, போக்குவரத்து குறித்த நிகழ்நேரத் தகவல்களையும் வழங்கும்.
தேசிய தினத்தை முன்னிட்டு, 21-க்கும் மேற்பட்ட ஓய்வு, உணவகப் பகுதிகளில் (R&R), “மலேசியா மடாணி: ரக்யாட் டிசந்துனி” (Malaysia MADANI: Rakyat Disantuni) என்ற கருப்பொருளில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மலேசிய சுற்றுலாத்துறை யுடன் இணைந்து, #TerokaMalaysiaBersamaPlus என்ற டிக் டாக் (TikTok) போட்டியை பிளஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில், RM15,000 மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்தப் போட்டி, செப்டம்பர் 16, 2025 வரை நடைபெறும்.