அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி இணைந்து நடித்துள்ள மதராஸி படம் வருகிற 5ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் காந்தாரா சாப்டர் 1, என்டிஆர் - பிரஷாந்த் நீல் படம் என பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.ருக்மிணி வசந்தின் தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால். இவர்தான் கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா விருதை பெற்றவர். 2007ம் ஆண்டு அவரது துணிச்சலுக்காக, அவருடைய வீர மரணத்திற்கு பின் இந்த விருது வழங்கப்பட்டது.
ருக்மிணி வசந்த் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.