Offline
சின்னத்திரையில் களமிறங்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.. எந்த நிகழ்ச்சி பாருங்க!
By Administrator
Published on 09/03/2025 09:00
Entertainment

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கி இப்போது ரசிகர்கள் கவனிக்கும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

சின்ன சின்ன வேடத்தில் நடித்து அசத்தியவர் புதிய பாதை படத்தை இயக்கியும், நடித்தும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

பின் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கியவர் நீ வருவாய் என, அழகி, அம்புலி என பல வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். இப்போது படங்கள் இயக்குவது, படங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.இந்நிலையில், தற்போது தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் ‘பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்' என்ற நிகழ்ச்சியை செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் தொகுத்து வழங்க இருக்கிறார்.தற்போது, இது குறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், " அப்துல் கலாமுக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது.நடிகர் விவேக்கை அதிகம் ‘மிஸ்' செய்கிறேன்.

Comments