சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக மாபெரும் வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸில் நடக்கும். அதுவும் லோகேஷுடன் ரஜினி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை.முதல் நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது. மேலும் தற்போது ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கூலி இணைந்துவிட்டது.கூலி திரைப்படம் வெளிவந்து 19 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 151 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.