Offline
சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா
By Administrator
Published on 09/04/2025 09:00
Entertainment

ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா, பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகுநடிப்பில் இருந்து விலகி இருந்தார். இடையே அவ்வப்போது நடித்து வந்த நஸ்ரியா, சென்ற ஆண்டு தெலுங்கில் நானியுடன் அண்டே சுந்தரானிக்கி படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘சூர்யா 46’ ஆகஉருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

சூர்யா அடுத்ததாக ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்..இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம்இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments