Offline
‘ஏஐ’ வேண்டாம், அனிருத் போதும்: லோகேஷ்
By Administrator
Published on 09/04/2025 09:00
Entertainment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’, ‘விக்ரம்’, ‘கூலி’ ஆகிய மூன்று படங்களுமே ரூ.450 கோடிக்கு மேல் வசூல் கண்டுள்ளன. இதையடுத்து, கார்த்தி நடிக்கும் ‘கைதி-2’ படத்தை அவர் இயக்க உள்ளார்.

‘கூலி’ படம் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் குறைவைக்கவில்லை. இதுவரை மொத்த வசூல் ரூ.525 கோடியைக் கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 1ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய லோகேஷ் கனகராஜிடம், செயற்கை நுண்ணறிவு குறித்து கேட்கட்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், திரைத்துறையில் ‘ஏஐ’யின் உதவி நிச்சயம் தேவைப்படும் என்றார்.

“அதற்காக ‘ஏஐ’ ஆதிக்கம் செலுத்தும் என்றெல்லாம் கூறுவதை ஏற்க இயலாது. ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போது அதன் உதவியைப் பலர் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதனை எப்படி, எந்த அளவு அனுமதிக்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது,” என்றார் லோகேஷ்.

‘கூலி’ படத்தில் ‘ஏஐ’ உதவியுடன்தான் திரு ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு ‘ஏஐ’ அதிகம் தேவையில்லை என்றும் அதற்குப் பதில் இசையமைப்பாளர் அனிருத்தைப் பயன்படுத்திக் கொண்டால் போதும் என்றும் தெரிவித்தார்.

Comments