Offline
Menu
கிம் ஜாங் உன் பயன்படுத்திய பொருட்களை துடைத்த உதவியாளர்கள்: காரணம் என்ன?
By Administrator
Published on 09/06/2025 09:00
News

மாஸ்கோ, இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை தோற்கடித்ததை சீனா கொண்டாடும் வகையில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன் பங்கேற்றனர். அவர்கள் ஜி ஜின்பிங் உடன் சேர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தபின், கிம் ஜாங் உன்னின் உதவியாளர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சந்திப்பு முடிந்ததும், கிம் ஜாங் உன் தண்ணீர் குடித்த கிளாசை அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றதுடன், கிம் ஜாங் உன்அமர்ந்த இருக்கை மற்றும் அவர் தொட்ட மேஜை ஆகியவற்றை கிருமி நாசினியால் துடைத்தனர்.

கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்த பிரச்சினைகள் யாருக்கும்தெரியக்கூடாது என்பதற்காகவே, அவரது உதவியாளர்கள் இதுபோன்று செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில்,கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ ரகசியத்தை காக்க அவர்கள் இப்படி செய்ததாகவும், பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது.

Comments