மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண்.
அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர். யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கம் என இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது.
மோனலிசா போஸ்லேவுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகள் வந்தது. அதை ஏற்று சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரைபார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மோனோலிசா போஸ்லேவுக்கு மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. அதில் பங்கேற்ற மோனலிசா போஸ்லே இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது.