Offline
அஜித் படத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு
By Administrator
Published on 09/06/2025 09:00
Entertainment

அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘குட் பேட் அக்லி’ படத்தில், தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பினார். பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

 

Comments