அஜித்தின் தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதை தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல சூப்பர்ஹிட் ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார்.மதராஸி படத்தில் முதல்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். மேலும் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யுத் ஜாம்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மதராஸி படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது