ரோஜா ரோஜா
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜா. இந்த பாடல் 1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்றிருந்தது.
இன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில நாட்களாக ஒரு இளைஞன் ரோஜா ரோஜா பாடலை கச்சேரி ஒன்றில் அசால்ட்டாக சூப்பராக பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அட யாரா இந்த பையன் இப்படி பாடுறான் என கேட்டு அந்த வீடியோவை வைரலாக்கினார்கள்.இந்த நிலையில், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் பிரபல பின்னணி பாடகர் ஆவார். துப்பாக்கி படத்தில் வந்த ’குட்டி புலி கூட்டம்’, கழுகு படத்தில் வந்த ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’, மாற்றான் படத்தில் வந்த ‘தீயே தீயே’ போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.