சென்னை: இயக்குநர் அட்லி நடிகை பிரியா அட்லியை திருமணம் செய்துக் கொண்டு அழகான ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். தமிழ் சினிமாவில் இயக்குஅர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, நயன்தாராவின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.நண்பன் படத்தில் விஜய்யுடன் பணியாற்றிய நிலையில், அவரை வைத்து தெறி படத்தை எடுத்த அட்லி அப்படியே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக ஆனது மட்டுமின்றி தற்போது இந்தியாவிலேயே முன்னணி இயக்குநர்களில் டாப் 5 இடத்துக்குள் உள்ளார்.மனைவியுடன் ரொமான்ஸ்: என்ன தான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி தனது மனைவி பிரியாவுடனும் தனது குழந்தையுடனும் நேரத்தை செலவிடுவதையும் மறக்காமல் செய்து வருகிறார் அட்லி. கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பிரியா சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். பிரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அட்லி அதே காதலுடன் தற்போது வெளியிட்ட வீடியோ ரசிகர்களை லைக் செய்ய வைத்து வருகிறது.