Offline
Menu
ஓடிடியில் வெளியானது அனுபமாவின் “பரதா”
By Administrator
Published on 09/14/2025 09:00
Entertainment

பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அப்படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பரதா’ என்ற படம் வெளியானது. இந்த படத்தினை ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.பிரவீன் கந்த்ரேகுலா இயக்கிய இந்த படம் மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பை மையமாக வைத்து, ஆணாதிக்கத்தை எதிர்கொள்ளும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா க்ரிஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் திரையரங்கை போலவே ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments