Offline
Menu
“வடசென்னை 2” அப்டேட் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்
By Administrator
Published on 09/17/2025 09:00
Entertainment

சென்னை,சிலம்பரசன் தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது. அதாவது இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘வாடிவாசல்’ படம் தள்ளிபோய் கொண்டே செல்ல, சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன். இதற்காக சமீபத்தில் புரோமோ படப்பிடிப்பு நடந்தது. ஆனால், கொஞ்சம் இடைவெளி ஏற்பட, படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது. வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.

இந்நிலையில், ‘இட்லி கடை’ படத்தின் இசைவெளியீடு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘வடசென்னை 2’ படம் விரைவில் உருவாக உள்ளதாக கூறியுள்ளார்.

Comments