ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஊர்வசி ரவுடேலா மற்றும் மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED ) சம்மன் அனுப்பியுள்ளது.
செப்டம்பர் 15 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக ED தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொல்லப்பட்டது. மிமி சக்ரவர்த்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பியும் ஆவார்.
சூதாட்டசெயலி வழக்கு தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. ஷிகர் தவான் எட்டு முறை விசாரிக்கப்பட்டுள்ளார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோரும் முன்னதாக விசாரிக்கப்பட்டனர்.
பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.