Offline
Menu
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மிரட்டல்கள் அரசியல் நோக்கம் கொண்டதா?
By Administrator
Published on 09/18/2025 09:00
News

கோலாலம்பூர்:  பல நாடாளுமன்ற உறுப்பினர்களை 100,000 அமெரிக்க டாலர்கள் கேட்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்ற வேளையில், ​​இந்த மிரட்டல் முயற்சி அரசியல் நோக்கம் கொண்டதா என்று இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சில நேரங்களில்  இது சந்தர்ப்பவாதிகளை உள்ளடக்கியது என்று  ​​காவல் துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  செனட்டர் ஆகியோரால் போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. போலீஸ் புகார்களை அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.ஆரைச் சேர்ந்த வோங் சென் (சுபாங்), டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி (சுங்கைப்பட்டானி), கெராக்கானைச் சேர்ந்த வோங் சியா ஜென் (கூலிம்),   செனட்டர் நெல்சன் டபிள்யூ அங்காங் ஆகியோர் ஆவர். மிரட்டி பணம் பறித்தல், நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்துதல் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லி தான் தனக்கு மின்னஞ்சல் மிரட்டல் வந்ததாக முதலில் வெளிப்படுத்தினார்.  அந்த மின்னஞ்சலில் அவரது படம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு டாக்டரேட் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் உள்ளதாக அவர் கூறினார். மின்னஞ்சல்களைப் பெற்ற மற்ற அரசியல்வாதிகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில், ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் அட்லி; கோத்த கினபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின்; கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி; ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஃஙா, செனட்டர் மனோலன் முகமது ஆகியோர் ஆவர்.

Comments