மலாக்கா மாநிலத்தில் வாழும் இந்தியர்களுக்காக இறுதி சடங்கு செய்யும் நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இரண்டாவது முறையாக மாநில முதலமைச்சருக்கு மகஜர் நேற்று வழங்கப்பட்டது.
மலாக்காவை பகுதியைச் சேர்ந்த நான்கு அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், மலேசிய சமூக நலன் நீதிக்கான குரல் கொடுக்கும் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், ஆயேர் குரோவிலுள்ள ஸ்ரீ நெகிரி ஆட்சிக் குழு கட்டடத்தின் முன்பு அமைதியாக ஒன்று கூடி மகஜைரை வழங்கினர். மலாக்கா முதலமைச்சரின் இந்தியர் நல அதிகாரி புவனேஸ்வரன் மற்றும் உஸ்தாத் கைருல் அமிட் ஆகியோரிடம் அந்த மகஜரை மலேசிய சமூக நலன் நீதிக்கான குரல் கொடுக்கும் சங்கத்தின் தலைவர் உலக நாதன் வழங்கினார்.
இது எங்களது உரிமை போராட்டம். எங்களது அடிபடை தேவைகளில் ஒன்று இறப்பு என்பது அனைவரும் வீட்டிலும் நிகழ கூடிய ஒன்று .அது இல்லை என்று யாரும் மாற்று கருத்து கூற இயலாது. அந்த நிலம் முறைபடி ஒதுக்கப்படு விடடால் யாரும் இங்கு திருட்டு தனமாக நீத்தார் கடமைகளை செய்ய வேண்டிய அவசியமே இல்லை . அரசாங்கம் இந்த விவகாரத்தில் சற்று முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் இனியும் இதனை புறக்கணிக்க கூடாது என உலக நாதன் மாநில அரசைக் கேட்டுக் கொண்டார். இந்த மகஜருக்கு பதில் இல்லை என்றால் புத்ரா ஜெயாவில் ஒன்றுக் கூடி பிரதமரை சந்திக்க அணி திரட்டுவோம் என செய்தியாளர்களிடத்தில் அவர் தெரிவித்தார்.
“இந்தியர்களுக்கான இறுதி சடங்கு நிலம் மலாக்காவில் இல்லை என்பது ஒரு வருத்தக்குரிய உண்மை. இளம் வயதில் தொடங்கிய இந்த எதிர்பார்ப்பு, இன்று முதிர்ந்ததற்குப் பிறகும் தீரவில்லை” என்று சமூகத் தலைவர்கள் வேதனையுடன் கூறினர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
“நாங்கள் பெரிய நிலத்தை கேட்கவில்லை. குறைந்தது ½ ஏக்கர் நிலம் கிடைத்தாலே மகிழ்ச்சி. கடற்கரை ஓரமாகவோ, ஆற்றங்கரையாகவோ ஒரு எளிய இடம் நமக்குத் தரப்பட்டாலே போதுமானது.” இந்த பிரச்சனை கடந்த ஆண்டு முதல் அரசிடம் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் இதுவரை எந்தவித தீர்வும் அமையவில்லை என்பதையும் மக்கள் வெளிப்படையாக தெரிவித்தனர்.
அரசியலைத் தாண்டிய மனிதநேயத்துடன் செயல் பட வேண்டும் என்றனர்.இந்த முயற்சி எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாதது என்றும், “இந்தியர்” என்ற அடையாளத்தில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது பெருமைக்குரிய விஷயமாகும் என்றும் அவர்கள் கூறினர்.