ஒட்டவா,இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்புகள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்பினர் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் அமைப்பான நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். தூதரகத்திற்கு வர திட்டமிட்டுள்ளவர்கள் வேறு தேதியைத் தேர்வு செய்யுமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.