லோகா டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் லோகா. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். ரூ. 30 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 250+ கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.இந்த நிலையில், லோகா தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மலையாள வெர்ஷன் ரூ. 4.8 கோடியும், தமிழ் டப் வெர்ஷன் ரூ. 15 கோடியும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.இதுவரை மலையாளத்தில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு வந்த எந்த படமும் இவ்வளவு பெரிய வசூலை செய்ததில்லை என கூறுகின்றனர்.