Offline
Menu
சூப்பர் ஹீரோ படத்தில் ஹாலிவுட் நட்சத்திரத்துடன் இணையும் ராஷ்மிகா.. அட, இப்படி ஒரு கூட்டணியா?
By Administrator
Published on 09/19/2025 09:00
Entertainment

ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம் வருகிறார். புஷ்பா 2, அனிமல், சாவா என தொடர்ந்து மாபெரும் வசூல் வேட்டையாடிய படங்களில் கதாநாயகியாக நடித்து இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.இந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் பாலிவுட் முன்னணி ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் க்ரிஷ்.90ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக க்ரிஷ் 4 படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், க்ரிஷ் 4 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளாராம். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Comments