Offline
Menu
காலமானார் நடிகர் ரோபோ சங்கர்
By Administrator
Published on 09/19/2025 09:05
News

சென்னை: பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கர் உடல்நல பிரச்சனையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தார். முக்கியமாக அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் காமாலை வந்தால் மரணம் நிச்சயமா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மருத்துவர்கள் சிலர் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

மஞ்சள் காமாலை என்பது நோய் கிடையாது அது ஒரு நோயின் அறிகுறி. இந்த பாதிப்பு ஏற்கெனவே ரோபோ சங்கருக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உடலில் 'பிலிருபின்' என்கிற கழிவு வெளியேற்றப்படும். இது ஒரு சாதாரண கழிவு பொருள்தான். உடலில் உள்ள பழைய ரத்த சிவப்பு அணுக்கள் சிதையும் போது அவற்றிலிருந்து வெளியேறும் ஹீமோகுளோபின் என்ற நிறமி பொருள் உடைந்து பிலிருபினாக மாறும். இது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

ஒவ்வொரு மனிதர்களின் உடலிலும் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். இந்த அணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள்தான். இந்த அணுக்கள் பழையதாகும் போது அவை மண்ணீரல், கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள மேக்ரோபேஜ்களால் உடைக்கப்படுகின்றன. இவ்வாறு உடைக்கப்பட்ட அணுக்கள் அனைத்தும் அதில் உள்ள ஹீமோகுளோபினால் பிலிருபினாக மாற்றப்படுகிறது.

ரோபோ சங்கர் உயிரிழந்தது எப்படி? 

இதற்கு ஒரே ஒரு தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான். ஆனால் அது லேசுபட்ட காரியம் கிடையாது. ரத்த சொந்தத்தில்தான் கல்லீரலை பெற்று அதை மாற்றி வைக்க முடியும். குழந்தைகள் எனில், பெற்றோர்கள் கல்லீரலை கொடுக்க முன்வருவார்கள். ஆனால், வயதானவர்களுக்கு கல்லீரலை தானமாக கொடுக்க யாரும் பெரிய அளவில் முன்வர மாட்டார்கள். இதில் உள்ள இரண்டாவது சிக்கல், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னரும் கூட உடல்நிலை கவனமாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ரோபோ சங்கருக்கு கல்லீரல் முழுவதுமாக செயலிழந்ததுதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது கல்லீரல் செயலிழந்துவிட்டால் நோய்தொற்று அதிகமாவது, உடல் உருப்புக்களில் நீர் அதிகம் சேர்வது போன்றவை மூலம் கூட மரணம் ஏற்படும். எனவேதான் இந்த பிரச்சனை மிகுந்த ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

Comments