மலேசியா ஏர்லைன்ஸ் (MAS) வரலாறு படைத்தது. கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலுவுக்குச் சென்ற MH2610 விமானம், தரைவழி செயல்பாடுகள் முதல் விமானி அறை வரை முழுமையாக பெண்கள் குழுவுடன் புறப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
செக்-இன் முகவர்கள், பொறியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், கேபின் பணியாளர்கள், விமானிகள் என பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் பெண்களால் மட்டுமே கையாளப்பட்டதாகவும் இது விமானப் பயணத்தில் பெண்களின் வலிமை, நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் MAS தெரிவித்துள்ளது.
மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்தின் பணியாளர்களில் தற்போது 36% பெண்கள் உள்ளனர். இது சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான IATA வின் 25by2025 இலக்கையும் கடந்துள்ளது “இந்த மைல்கல் வெறும் முன்னேற்றம் மட்டுமல்ல, பெண்களின் வளர்ச்சிக்கு வானத்தில் எல்லைகள் இல்லை என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலும்கூட,” என்று MAS தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
MAS மேலும், இந்த சாதனை, சக ஊழியர்களையும் எதிர்கால விமானிகளின் லடசியங்களுக்கும் கனவுகளுக்கும் ஒரு வெற்றிப்படியாகவும் தடைகளை உடைக்கும் சக்தியாகவும் அமையும் என MAS குறிப்பிட்டுள்ளது.