Offline
Menu
மலேசியாவில் “iPhone 17 அதிகாரப்பூர்வ வெளியீடு – தி எக்ஸ்சேஞ்ச் TRX-இல் பெரும் வரிசை
By Administrator
Published on 09/20/2025 09:00
News

கோலாலம்பூர்:

ஆப்பிளின் புதிய iPhone 17 தொடர், மலேசியாவின் முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள The Exchange TRX-இல் இன்று பெரும் வரவேற்புடன் அறிமுகமாகியது.

காலை 8.00 மணிக்கே கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காலை 7.30 மணிக்கே வரிசையில் நின்றனர். புதிய iPhone 17, iPhone Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை மலேசியா உட்பட உலக சந்தைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

இதில் iPhone 17 -ஐ முற்கூட்டியே பதிவு செய்து பிக்-அப் வரிசையில் முதலில் இருந்த டேனியல் , அவர் நள்ளிரவு 12 மணி முதலே காத்திருந்து, Cosmic Orange நிறத்தில் iPhone 17 Pro Max-ஐ பெற்றார்.அதேநேரம் நேரடியாக கடைக்கு வந்து வாங்கும் (walk -in) வரிசையில் முதன்மை இடத்தை பிடித்தவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த மு. துஷார் அகமட் ஹசன். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பே மலேசியா வந்து, அதிகாலை 4 மணி முதலே காத்திருந்து அதே மாடலை பெற்றார்.

Comments