கோலாலம்பூர்:
இலக்கிடப்பட்ட ரோன்95’ பெட்ரோல் மானியத்தைப் (RON95 petrol subsidy) பெறுவதற்கு, பொது மக்கள், தங்களின், மை.காட்’ (MyKad) அட்டைகள், நல்ல நிலையில், உள்ளதா என்பதை, சரிபார்க்குமாறு, உள்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில், பெட்ரோலின் விலை, ஒரு லிட்டருக்கு, RM1.99 காசாக குறையும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்த மானியத்தைப் பெற, மை.காட் சரிபார்ப்பு, தேவைப்படும். இதுகுறித்து, இன்று, தனது முகநூல் பக்கத்தில், பதிவிட்டுள்ள, அமைச்சர், சிதைந்த அல்லது, பயன்படுத்த முடியாத, `மை.காட்’ சிப்பைக் (chip) கொண்டவர்கள், அதே நாளில், பழுதுபார்க்க, தேசியப் பதிவுத் துறை அலுவலகத்திற்குச் (National Registration Department) செல்லுமாறு, அறிவுறுத்தினார்.