கோலாலம்பூர்:
தாய்லாந்தின், புதியப் பிரதமராகப், பொறுப்பேற்ற, அனுட்தின் சான்விரகுலை (Anutin Charnvirakul), மலேசியாவுக்கு, வருகை தருமாறு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim), அழைப்பு, விடுத்துள்ளார்.
இந்த அழைப்பு, இரு அண்டை நாடுகளுக்குமிடையேயான, நெருங்கிய உறவை, வலுப்படுத்தும் நோக்கில், நேற்று, தொலைப்பேசி வழியாக, மேற்கொள்ளப்பட்டது.
இந்த உரையாடலின்போது, இருநாட்டுத் தலைவர்களும், தாய்லாந்து-கம்போடியா எல்லையில், நிலவும், சமீபத்திய, வளர்ச்சிகள் குறித்து, விவாதித்ததாக, அன்வார், தனது முகநூல் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.
இதனிடையே அமைதியை நிலைநிறுத்துவதற்கு, பேச்சுவார்த்தை, இராஜதந்திரம் மூலம், எந்தப் பிரச்சினைகளையும், தீர்ப்பதற்கும், முக்கியத்துவம், அளிப்பதாக, அன்வார், வலியுறுத்தினார்.