Offline
Menu
ஓடிடியில் வெளியாகும் “மகா அவதார் நரசிம்மா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
By Administrator
Published on 09/20/2025 09:00
Entertainment

கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘மகா அவதார் நரசிம்மா’ படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

‘மகா அவதார் நரசிம்மா’ படம் உலகளவில் இதுவரை ரூ.310 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இப்படம் பாலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘மகா அவதார் நரசிம்மா’ படம். இப்படம் 50 நாளை கடந்து வெற்றிநடை போட்டுவருகிறது.

Comments