கோலாலம்பூர்:
பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பில் நேற்று 27 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நேற்றுக் காலை 11.35 மணியளவில் வீட்டு உரிமையாளரிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது என்று, பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
வீட்டு உரிமையாளர், தனது குத்தகைதாரரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அதேநேரம் குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கட்டிட நிர்வாகத்தால் அவருக்கு எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
போலீஸ் ரோந்து குழுவினர், வீட்டு உரிமையாளர் மற்றும் பூட்டு உடைக்கும் தொழிலாளியுடன் சேர்ந்து அந்த வீட்டின் கதவைத் திறந்தபோது, குளியலறையில் அந்தப்பெண்ணின் உடல் தொங்கிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.