கோலாலம்பூர்,
கம்போங் சுங்கை பாரு நில அபகரிப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என கூட்டரசு பிரதேச முன்னால் அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் வலியுறுத்தினார்.
நில மேம்பாட்டாளர் தரப்பை அழைத்து வந்தது யார்? குடியிருப்பாளர்களுக்கு அதிருப்தி ஏற்படும் வரையில் ஏன் அந்தசெய
பாடுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டன ஆகியவை தான பதில் சொல்ல வேண்டிய முதன்மை கேள்விகள் என்று ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான அவை பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயல்பாடுகள் அனைத்தும் கம்போங் சுங்கை பாருவை தரைமட்டமாக்க செய்வது போல் உள்ளது.
எனவே ஊழல் தடுப்பு ஆனணயம் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாராணை நடத்த வேண்டும் எனவும் ஷஹிடான் கூறினார்.