Offline
Menu
கோலாலம்பூரில் போக்குவரத்து இடையூறு- குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது
By Administrator
Published on 09/21/2025 09:00
News

கோலாலம்பூர்:

தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் அமலாக்க நடவடிக்கையின் போது மொத்தம் 10,036 போக்குவரத்து அபராதங்கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் யூ சுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்ற நடவடிக்கையில், போக்குவரத்து இடையூறு முக்கிய குற்றமாக அடையாளம் காணப்பட்டது என்றார்.

இதில் தினசரி நடவடிக்கைகள் மூலம் 8,006 தண்டம் மற்றும் அபராதங்கள் வழங்கப்பட்டன, மேலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் 1,330, Ops Titik நடவடிக்கையில் 700 தண்டம் மற்றும் அபராதங்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

அதேநேரம் விதிக்கப்படட மொத்த தண்டம் மற்றும் அபராதங்களில் 9,508 வாகனங்களுக்கு வழங்கப்பட்டன, 528 பாதசாரிகளுக்காக வழங்கப்பட்டன.

Comments