குவாந்தான்,
பகாங் மாநிலத்தின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்வதற்க்கூ இட தரும் வகையில் அந்த மாநி அரசாங்கம் கள ஆய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வரவு செலவு திட்டம் இவ்வாண்டு இறுதியின் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அத்திட்டம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு பகாங்கை இன்னும் சுபிட்சமான நிலைக்கு கொண்டு செல்ல இந்த ஆய்வு அவசியமாகிறது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கருத்துரைத்தார்.
பகாங் மாநிலத்தின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்ட செயல்பாடுகள் நிறைவு எற்றாலும் இன்னமும் உறுதிப்படுத்தப் படவில்லை.
இவ்வாண்டு இறுதியில் இத்திட்டம் தாக்கல் செய்யபடும் வரையில் அதனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.