புத்ராஜெயா உள்ள மாலில் உள்ள ஒரு திரையரங்கில் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முகலிஸைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவத்தை அவர் உறுதிப்படுத்தினார். ஐஓஐ சிட்டி மாலில் தீ விபத்து ஏற்பட்டது. திரையரங்கில் உள்ள ஒரு சமையலறையில் சுமார் 30% எரிந்து போயிருந்தது.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்று அவர் கூறினார். ஜிஎஸ்சி, அதன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில், “எதிர்பாராத சூழ்நிலைகள்” ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது. செய்தி வெளியிடப்படும் இந்நேரத்தில், திரையரங்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.