Offline
Menu
சைபர் தாக்குதல்: ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு
By Administrator
Published on 09/22/2025 09:00
News

ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்காரணமாக லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் பயணிகள் சேவை முற்றிலும் முடங்கியது.

இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். உலகம் முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவை வழங்கும் காலின்ஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Comments