Offline
Menu
இந்தியா போர் தொடுத்தால் சவுதி அரேபியா ஆதரவளிக்கும்; பாகிஸ்தான்
By Administrator
Published on 09/22/2025 09:00
News

இஸ்லமாபாத்,பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சர் கவ்ஜா ஆசிப் கூறியதாவது: இந்தியா போர் தொடுத்தால் சவுதி அரேபியா பாகிஸ்தானை பாதுகாக்க வரும். இதில் சந்தேகமே இல்லை” என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள Geo TVக்கு அளித்த பேட்டியில் காவ்ஜா இந்த தகவலை கூறியுள்ளார். மேலும், காவ்ஜா கூறியதாவது:சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தம் என்பது தாக்குதல் ஒப்பந்தம் என்பதை விட, தற்பாதுகாப்பு ஒப்பந்தமாகும். சவுதி அரேபியாவுக்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு எதிராகவோ ஏதாவது அத்துமீறல் நடைபெற்றால் நாங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்போம். இந்த ஒப்பந்தத்தை அத்துமீறலுக்கு பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், இந்த ஒப்பந்தம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் சவுதி அரேபியா பயன்பாட்டுக்கும் கிடைக்கும்” என்றார்.

Comments