Offline
Menu

LATEST NEWS

தாயாகப்போகும் நடிகை கத்ரீனா கைப்
By Administrator
Published on 09/25/2025 09:00
Entertainment

மும்பை,பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல். இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப்பை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தாய்மைப்பேறு அடைந்துள்ளார். இந்தத் தகவலை கத்ரீனா கைப் – விக்கி கவுசல் தம்பதி சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கத்ரீனா கைப் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்க்கையில் சாலச்சிறந்த சகாப்தத்தை தொடங்க ஆயத்தமாகியுள்ளோம். எங்கள் மனம் மகிழ்ச்சியாலும் அன்பாலும் நிரம்பியுள்ளது” என்று குறிப்பிட்டு தனது கணவர் விக்கி கௌஷாலுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டு தான் தாய்மைப்பேறு அடைந்துள்ளதை ம்கிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments