Offline
Menu
சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் சாந்தனு.. எந்த படத்திற்கு தெரியுமா?
By Administrator
Published on 09/25/2025 09:00
Entertainment

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூ ஸ்டார் திரைப்படம் கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதை ஜெயக்குமாரும் சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனுவும் வென்றுள்ளனர்.

ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி என பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments