இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மக்கள் மனதில் என்றும் வாழும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை, விரைவில் திரைப்படமாக உருவாகிறது. இதில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தை தனுஷ் ஏற்று நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான விளம்பர மற்றும் அறிமுக புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இதில் ஆர்வமுடன் பங்கேற்ற தனுஷ், கலாமின் உடல் மொழி, நடைமுறை, வெளிப்பாடு போன்றவற்றை முழுமையாக இயல்பாக வெளிப்படுத்த நினைத்ததாகத் தகவல்.
புகைப்படங்களை பார்த்த அனைவரும் “தனுஷ் அச்சு அசலாகவே அப்துல் கலாம் போல காட்சியளிக்கிறார்” என்று வியந்தனர்.
இப்படத்தை இயக்கும் ஓம் ராவத் (பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் பட இயக்குநர்), “தனுஷை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு அல்ல” என்று பெருமையாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு தரப்பும், நண்பர்களும் பல்வேறு நடிகர்களின் பெயர்களை பரிந்துரைத்தபோதும், கலாமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் தனுஷ்தான் சரியானவர் என உறுதியுடன் இருந்தார் ஓம் ராவத்.
இதற்கிடையில், அப்துல் கலாமின் உறவினர்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். அவரது பழக்கவழக்கங்கள், சிறப்பான வாழ்க்கைச் சுவடுகள் குறித்து கேட்டு அறிந்து, தன் நடிப்பில் அதை வெளிப்படுத்தவுள்ளார்.