Offline
Menu

LATEST NEWS

அடுத்த வருடம் “வடசென்னை 2” படப்பிடிப்பு தொடங்கும்: தனுஷ்
By Administrator
Published on 09/27/2025 09:00
Entertainment

தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.

ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மதுரையில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தனுஷிடம் வடசென்னை 2 குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ் “வடசென்னை 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். அதற்கு அடுத்த வருடம் (2027) ரிலீஸ் ஆகும்” என்றார்.

வடசென்னை படம் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. லோக்கல் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது.

Comments