Offline
Menu

LATEST NEWS

Leading Light..! இயக்குநராக களமிறங்கிய சூர்யா- ஜோதிகா மகள் தியா
By Administrator
Published on 09/28/2025 09:00
Entertainment

2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” .சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது.

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments