Offline
Menu

LATEST NEWS

வைரலாகும் சமந்தா எழுதிய கவிதை
By Administrator
Published on 10/01/2025 09:00
Entertainment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்’ என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Comments