நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம். ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார். இதற்கிடையில் இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார். முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் பிலிம் இன்டஸ்டிரி (Indian Film Industry) என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.