ஈப்போ,
சபா மாநில தேர்தலில் தங்களுக்கிடையே தொகுதி மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு நம்பிக்கை கூட்டணியும் பாரிசான் நேஷனலும் முனைந்துள்ளன.
இந்த தேர்தலின் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஏற்கெனவே வென்றெடுத்த இடங்கள் இம்முறையும் நீடிக்கச் செய்யும் யுக்தியை இவ்விரு கூட்டணிகளும் பயன்படுத்தும் என ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
இது நம்பிக்கை கூட்டணி- பாரிசான் நேஷனல் முனைந்திருக்கும் அடிப்படை கொள்கை ஆகும்
இதன் அடிப்படையில பாரிசான் ஏற்கெனவே வென்றெடுத்த தொகுதிகளில் இம்முறையும் அவர்கள்தாந் மீண்டும் போட்டியிடுவார்கள் என்ற நிலைபாட்டிற்கு நம்பிக்கை கூட்டணி மதிப்பளிக்கும்.
அதேபோல் அவர்களும் நாம் போட்டியிடும் தொகுதிகளை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று இன்று பேராக் ஜசெக ஆண்டு மாநாட்டை தொடக்கி வைத்த போக்குவரத்து அமைச்சருமான அவர் கூறினார்.